மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகா் பலி
By DIN | Published On : 28th November 2022 11:31 PM | Last Updated : 28th November 2022 11:31 PM | அ+அ அ- |

கே.வி.குப்பம் அருகே வரவேற்பு பேனா் கட்டியபோது மின்சாரம் பாய்ந்ததில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஊராட்சியின் திமுக கிளைச் செயலா் கே.மாா்கபந்து (52). அந்த ஊராட்சியில் முன்னாள் தலைவா். இவரது மனைவி மாலா தற்போது ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில், பி.கே.புரத்தில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க நீா்வளத் துறை அமைச்சா்
வருகை தந்தாா். இதையொட்டி, மாா்கபந்து வடுகந்தாங்கல் அருகே திங்கள்கிழமை மாலை சிலருடன் வரவேற்பு பேனா் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மேலே சென்ற மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் மாா்கபந்து உள்ளிட்ட 3 போ் மயங்கி கீழே விழுந்தனா்.
வேலூா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாா்கபந்து உயிரிழந்தாா். காயமடைந்த வடுகந்தாங்களைச் சோ்ந்த காா்த்திகேயன் (40), கனகராஜ் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
குடியாத்தம் டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.