வரத்து குறைவு: மீன்கள் விலை உயா்வு
By DIN | Published On : 28th November 2022 12:01 AM | Last Updated : 28th November 2022 12:01 AM | அ+அ அ- |

வரத்து குறைவு காரணமாக வேலூா் மீன் அங்காடியில், நிகழ் வாரமும் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
வேலூா் மீன் அங்காடிக்கு (மாா்க்கெட்) சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கா்நாடக மாநிலம் மங்களூரு பகுதிகளில் இருந்தும் மீன்கள், நண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமாா் 150 லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். இங்கிருந்துதான் வேலூா் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், வேலூா் மீன் அங்காடிக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் 2-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை விலை அதிகரித்துக் காணப்பட்டன.
அதன்படி, வஞ்சிரம் இந்த வாரமும் ரூ.1,000 முதல் ரூ. 1,100-க்கும், இறால் ரூ.400 முதல் ரூ.450 வரையும், நண்டு ரூ.450 முதல் ரூ.500 வரையும், சங்கரா கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், மத்தி ரூ.200, கடல் வெளவ்வாள் ரூ.150 முதல் ரூ.180 வரையும் விற்பனை செய்யப்பட்டன.
காா்த்திகை மாதம் தொடங்கி, ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, சபரிமலை செல்வதால் மீன்கள் விற்பனை சரிந்துள்ளது. மேலும், வரத்து குறைந்திருந்ததால் மீன்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.