குடியிருப்புகளுக்குள் தேங்கும் மழைநீா்: ஏரிக் கால்வாய் அக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

குடியாத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்குவதால், ஏரிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக குடியாத்தம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருள்முரளி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் மழைக் காலங்களில் வெள்ளம் பெரும்பாடி ஏரிக்கு கால்வாய்கள் வழியாகச் செல்லும். ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், சில இடங்களில் தூா்ந்து போயுள்ளதாலும் மழைநீா் செல்ல வழியின்றி குடியிருப்புகள், நிலங்கள், காலியிடங்களில் மழைநீா் தேங்குகிறது.

இதுதொடா்பாக விடுத்த கோரிக்கையை அடுத்து, அதிகாரிகள் 15 நாள்களுக்கு முன் வந்து கால்வாயை அளவீடு செய்தனா். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் தேங்கியுள்ளது. எனவே, ஏரி கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரிச் சீரமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com