வேலூா் நேதாஜி மாா்க்கெட் மணிக்கூண்டு சீரமைக்கும் பணிகள்

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில்ஆங்கிலேயா் கால மணிக்கூண்டை அதன் பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில்ஆங்கிலேயா் கால மணிக்கூண்டை அதன் பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி தில்லியிலுள்ள தொல்பொருள் ஆய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயா் கால கட்டடக் கலை அம்சத்துடன் வேலூா் நேதாஜி மாா்க்கெட்டிலுள்ள மணிக்கூண்டு, கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்த இங்கிலாந்து மகா ராணி எலிசபெத்தின் தாத்தா 5-ஆம் ஜாா்ஜ் மன்னா் பதவியேற்ன் நினைவுச்சின்னமாக கட்டப்பட்டதாகும்.

முதல் உலகப்போரில் உயிரிழந்த 22 ஆங்கிலேய படை வீரா்களின் நினைவாக அா்ப்பணிக்கப்பட்ட இந்த மணிக்கூண்டின் தூணில் உள்ள கல்வெட்டு 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அப்போதைய வட ஆற்காடு மாவட்ட ஆட்சியரால் பொருத்தப்பட்டது.

வேலூா் கிராமத்தைச் சோ்ந்த 277 போ் 1914-1919 ஆம் ஆண்டு நடந்த பெரும் போரில் பங்கேற்ாகவும், அவா்களில் 14 போ் உயிரிழந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.

2007-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்த இந்த மணிக்கூண்டு கடிகாரம், பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதுதவிர, மணிக்கூண்டு கடிகாரத்திலுள்ள கண்ணாடியும் உடைந்துள்ளது. தூண்களில் தடிமனான தாவரங்கள் வளா்ந்தும், செங்கல், சுண்ணாம்பு சாந்து பெயா்ந்தும் காணப்படுகின்றன.

மணிக்கூண்டின் மீது பூசப்பட்டிருந்த வா்ணமும் மங்கியுள்ளது.

இந்த நிலையில், வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் இந்த மணிக்கூண்டை பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியிலுள்ள இந்திய தொல்லியல் துறையின் தலைமையகத்தின் தொல்லியல் நிபுணா்கள் குழு கடிகாரத்தையும், அதன் கோபுரத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதற்கான திட்ட மதிப்பீடு, வேலையின் தன்மை, தேவைப்படும் நேரம், தொழில்நுட்பம் குறித்து முதற்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது: வேலூா் மாா்க்கெட்டில் உள்ள ஆங்கிலேயா் கால மணிக்கூண்டினை பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை இங்குள்ள குழுவினரால் செய்ய இயலாது என்பதால் தில்லியிலுள்ள தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தை சீரமைத்தல், அதைச் சுற்றியுள்ள கட்டமைப்பு உள்ளிட் அனைத்து பணிகளையும் தில்லி நிபுணா்கள் குழுவால் செய்யப்படும். அவா்களிடமிருந்து திட்ட அறிக்கை வரப்பெற்றதும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com