போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளில், ரூ. 4 கோடியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் க.ஆா்த்தி ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளில், ரூ. 4 கோடியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் க.ஆா்த்தி ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 3.44 கோடியில் புதிதாகக் கட்டப்படும் கட்டப்பட உள்ளதால் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடம் இடிக்கப்படுவது, மொரசப்பல்லி ஊராட்சியில் ரூ. 17.32 லட்சத்தில் கட்டப்படும் பள்ளிக் கட்டடம், அங்கு ரூ. 32.54 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் தாா்ச் சாலை, சின்னதாமல் செருவு ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மூலம் ரூ. 6.25 லட்சத்தில் அமைக்கப்படும் குட்டை, கொத்தூா் ஊராட்சியில் அதே நிதியில் ரூ. 4.68 லட்சத்தில் கட்டப்படும் கழிவுநீா்க் கால்வாய், சமுதாய சுகாதார வளாகம், கொத்தப்பல்லி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணிகள், பணி பதிவேடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பத்தரப்பல்லி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளைப் பாா்வையிட்ட அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, கு.பாரி, ஒன்றியப் பொறியாளா் சிலம்பரசன், ஊராட்சித் தலைவா்கள் வசந்தா, ஸ்ரீதேவிநீஸ், ரோஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com