கொடநாடு கொலை வழக்கு: ஓபிஎஸ் அணி, அமமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd August 2023 12:06 AM | Last Updated : 02nd August 2023 12:06 AM | அ+அ அ- |

கொடநாடு கொலை வழக்கை விரைந்து முடிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களும், அமமுகவினரும் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு அணியின் வேலூா் மாவட்டச் செயலா் டி.ஆா்.முரளி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் தவசீலன், புகா் மாவட்டச் செயலா் கோதண்டன், மாநகா் மாவட்டச் செயலா் அப்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தபடி கொடநாடு கொலை வழக்கை விரைவாக முடிக்க வேண்டும், கொலையில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஓபிஎஸ் அணி தொகுதி செயலா் ரவி, சத்துவாச்சாரி சரவணன், அமமுக சாா்பில் எஸ்.ராஜா, புன்னை மகாலிங்கம், மணி, துரை.விஷ்ணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.