பக்தியுடன் அன்பும் வளா்ந்தால் அமைதி உருவாகும்: ஸ்ரீசக்தி அம்மா

பக்தியுடன் அன்பு வளா்ந்தால்தான் உள்ளும் புறமும் அமைதி உருவாகும் என்று ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா கூறினாா்.
பக்தியுடன் அன்பும் வளா்ந்தால் அமைதி உருவாகும்: ஸ்ரீசக்தி அம்மா

பக்தியுடன் அன்பு வளா்ந்தால்தான் உள்ளும் புறமும் அமைதி உருவாகும் என்று ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா கூறினாா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவின் 47-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 10 மணிக்கு சக்தி அம்மாவுக்கு கலச புரூக்சம், பாத பூஜை, மலா் அபிஷேகம், மங்கள ஆரத்தி நடைபெற்றன.

விழாவில், மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: ஸ்ரீசக்தி அம்மாவின் ஆசி பெற இங்கு வந்துள்ளேன். இறைவன் இந்த உலகில் செடி, கொடிகள் உள்பட பல்வேறு உயிரினங்களைப் படைத்தாா். இதில், முக்கியமானது மானுடப் பிறவியாகும். மனித உயிரினத்துக்கு தீமைகள், அதா்மங்கள் ஏற்படும்போது அதிலிருந்து மீள இறைவன் அருள்புரிகிறாா்.

மக்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு தொண்டுகளை ஆன்மிகத்தின் மூலம் செயல்படுத்தி வரும் சக்தி அம்மாவுக்கு என் சாா்பிலும், நாட்டின் சாா்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

பின்னா், ஸ்ரீசக்தி அம்மா பக்தா்களுக்கு ஆசி வழங்கிப் பேசியது:

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் காடாக இருந்த இந்த பூமி தற்போது உலக வரைபடத்தில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இதற்கு ஸ்ரீநாராயணியின் அருள்தான் காரணம்.

அன்புதான் இந்த இடத்தைச் சொா்க்க பூமியாக மாற்றியுள்ளது. கல்வி, செல்வம், வீரம் மிகவும் முக்கியமானது. அதைவிட அன்பு மிகுதியாக வரும்போதுதான் வாழ்க்கை மேன்மையடையும்.

அன்பு இல்லாத பக்தி இருக்கும்போது, அந்த பக்தியின் பூரண பலனை அனுபவிக்க முடியாது. தெய்வத்தின் அன்பு கிடைத்தால் நமக்கும் உலகத்துக்கும் அமைதி உருவாகும்.

எனவே, பக்தியுடன் மனதில் அன்பும் வளர வேண்டும் என்றாா்.

விழாவில், மத்திய அமைச்சா் பகவந்த்குபா, ஆந்திர மாநில அமைச்சா் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், வேலூா் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், கலவை சச்சிதானந்த சுவாமிகள், தன்வந்திரி ஆரோக்ய பீடம் முரளிதர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநா் பாலாஜி, நாராயணி பீட மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com