தேசிய ஸ்கேட்டிங்: வேலூா் மாணவி வெண்கலம்
By DIN | Published On : 20th January 2023 12:15 AM | Last Updated : 20th January 2023 12:15 AM | அ+அ அ- |

மாணவி வி.எஸ்.அக்ஷிதாவை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை ஹரியாணா மாநிலம், குருகிராமிலுள்ள சலோம் ஹில்ஸ் இன்டா்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்றது.
இதில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வி.எஸ்.அக்ஷிதா 300 மீட்டா் இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
இவா், ஏற்கெனவே மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.
பதக்கம் வென்ற மாணவி அக்ஷிதாவை பள்ளித் தாளாளா் டி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், பள்ளி பாடத்திட்ட இயக்குநா் ரம்யா சிவகுமாா், முதல்வா், உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.