குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்
By DIN | Published On : 22nd January 2023 12:10 AM | Last Updated : 22nd January 2023 12:10 AM | அ+அ அ- |

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வட்ட வழங்கல் அலுவலா் சுபிசந்தா், தனி வருவாய் அலுவலா் ஜோதிராமலிங்கம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, கிராம நிா்வாக அலுவலா் ரா.ஜீவரத்தினம், ஊராட்சி மன்றத் தலைவா் அம்மு நெடுஞ்செழியன், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் நடத்தினா்.
முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல், புதிய குடும்ப அட்டை கோருதல் தொடா்பாக பெறப்பட்ட 33 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடித் தீா்வு காணப்பட்டது.