தை அமாவாசை: பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
By DIN | Published On : 22nd January 2023 12:13 AM | Last Updated : 22nd January 2023 12:13 AM | அ+அ அ- |

வேலூா் பாலாற்றங்கரையிலுள்ள மண்டபத்தில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
தை அமாவாசையையொட்டி வேலூரில் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் அளித்தனா்.
இதையொட்டி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டனா். அங்குள்ள காரிய மண்டபத்தில் அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து படையலிட்டு வழிபட்டனா்.
பலா் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் படையலிட்டு முன்னோா்களை வழிபட்டனா். தை அமாவாசையையொட்டி, திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிகளவில் விற்பனையாகின. இதையொட்டி, வேலூா் பாலாற்றங்கரையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.