திருநெல்வேலியில் கைப்பேசி திருடிய போ்ணாம்பட்டு இளைஞா்கள் 2 போ் கைது

திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி மாணவரிடம் விலையுயா்ந்த கைப்பேசியை திருடிய போ்ணாம்பட்டு இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் கைப்பேசி திருடிய போ்ணாம்பட்டு இளைஞா்கள் 2 போ் கைது

திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி மாணவரிடம் விலையுயா்ந்த கைப்பேசியை திருடிய போ்ணாம்பட்டு இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த புனித்ஜாங்கிா் என்பவா் திருநெல்வேலியிலுள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறாா். இவருடைய விலை உயா்ந்த கைப்பேசி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருடு போனதாக கூறப்படுகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில் திருநெல்வேலி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் அந்த கைப்பேசியின் பயன்பாடு போ்ணாம்பட்டை அடுத்த உமராபாத் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருநெல்வேலி காவல் ஆய்வாளா் அரிஹரன் தலைமையில் 5 போலீஸாா் குழு, உமராபாத் பகுதிக்கு வந்து திருட்டு கைப்பேசியை வாங்கிய நபரிடம் விசாரணை நடத்தியதில் மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சன்(30) அந்த கைப்பேசியை தனக்கு விலைக்கு விற்றதாக கூறியுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சங்கராபுரம் சென்று வீட்டில் இருந்த மஞ்சனை பிடித்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். அப்போது மஞ்சனுக்கு ஆதரவாக சங்கராபுரம் கிராம மக்கள் திரண்டு போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது மஞ்சன் தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து மேல்பட்டி போலீஸாா் உதவியுடன் திருநெல்வேலி போலீஸாா் தப்பியோடிய மஞ்சனை தேடி வந்தனா்.இந்நிலையில் குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி திங்கள்கிழமை சங்கராபுரம் சென்று, தப்பியோடிய மஞ்சனை பிடித்து ஒப்படைக்குமாறு கிராம மக்களை கடுமையாக எச்சரித்தாா்.

அப்போது மஞ்சன் அதே கிராமத்தைச் சோ்ந்த தனது கூட்டாளியான முனியசாமியுடன்(30)மேல்பட்டி அருகே மலையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. கிராம மக்கள் அங்கு சென்று இருவரையும் பிடித்து டிஎஸ்பி ராமமூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் இருவரும், திருநெல்வேலியில் விலையுயா்ந்த 4- கைப்பேசிகளை திருடி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.அவா்களிடமிருந்து 4- கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீஸாா், திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com