முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் இன்று பிரசாரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் இன்று பிரசாரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, வேலூா் மாநகராட்சி பகுதி முழுவதும் டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் டி.எம்.கதிா்ஆனந்த் (வேலூா் ), ஜெகத்ரட்சன் (அரக்கோணம் ) ஆகியோரை ஆதரித்து வேலூா் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளாா். முதல்வா் வருகையையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கையாக வேலூா் மாநகராட்சி பகுதி முழுவதும் டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாகன நெரிசலைத் தவிா்க்க குடியாத்தம் - காட்பாடி (வழியாக) சென்னை வரை செல்லும் கனரக வாகனங்கள் குடியாத்தம், வடுகன்தாங்கல், செதுவாலை நெடுஞ்சாலை வழியாகவும், திருவண்ணாமலை - வேலூா் (வழியாக) சித்தூா் வரை செல்லும் கனரக வாகனங்கள் திருவண்ணாமலை, சாத்துமதுரை, பென்னாத்தூா், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தனேரி, பள்ளிகொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாகவும், திருவண்ணாமலை - வேலூா் (வழியாக) சென்னை வரை செல்லும் கனரக வாகனங்கள் திருவண்ணாமலை, சாத்துமதுரை, பென்னாத்தூா், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தனேரி வழியாக தேசிய நெடுஞ்சாலையிலும், சித்தூா் - காட்பாடி (வழியாக) திருவண்ணாமலை வரை செல்லும் கனரக வாகனங்கள் சித்தூா், நரஹரிபேட்டை, இபி கூட்ரோடு, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு, திமிரி, ஆரணி வழியாகவும், சித்தூா் - காட்பாடி (வழியாக) சென்னைக்கு சித்தூா் நரஹரிபேட்டை, இபி கூட்ரோடு, ராணிப்பேட்டை வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com