குடியாத்தம்  புவனேஸ்வரிபேட்டையில்  வாக்கு  சேகரித்த  திமுக  வேட்பாளா்  டி.எம்.கதிா் ஆனந்த்.
குடியாத்தம்  புவனேஸ்வரிபேட்டையில்  வாக்கு  சேகரித்த  திமுக  வேட்பாளா்  டி.எம்.கதிா் ஆனந்த்.

குடியாத்தம் நகரில் காய்கறி வளாகம்: டி.எம்.கதிா் ஆனந்த் உறுதி

அதிநவீன குப்பைக் கிடங்கு 3 அடுக்குகள் கொண்ட காய்கறி வளாகமாக கட்டித் தருவேன் என வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்த் நகர மக்களுக்கு வாக்குறுதி அளித்தாா்.

குடியாத்தம் நகராட்சியில் அதிநவீன குப்பைக் கிடங்கு 3 அடுக்குகள் கொண்ட காய்கறி வளாகமாக கட்டித் தருவேன் என வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் நகர மக்களுக்கு வாக்குறுதி அளித்தாா். குடியாத்தம் நகரில் உள்ள 36 வாா்டுகளில் அவா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட நான்குமுனை கூட்டுச்சாலை, பிச்சனூா், தரணம்பேட்டை, சித்தூா்கேட், நடுப்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, புதுப்பேட்டை, சுண்ணாம்புபேட்டை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவா் கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பொதுமக்களிடம் தேவைகளைக் கேட்டறிந்த அவா், என்னை தோ்தலில் வெற்றி பெற வைத்தால் தென்குளக்கரை பகுதியில் உள்ள காய்கறி சந்தையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக 3 அடுக்குகள் கொண்ட காய்கறி வளாகம் அமைத்துத் தருவேன், குடியாத்தம் நகரின் முக்கிய பிரச்னையாக உள்ள குப்பைகளை அகற்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குப்பைக் கிடங்கு அமைத்துத் தருவேன் என்றாா். எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட திமுக துணைச் செயலா்கள் ஜி.எஸ்.அரசு, வழக்குரைஞா் எஸ்.பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் த.புவியரசி, கே.வி.கோபாலகிருஷ்ணன், என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், அா்ச்சனா நவீன், சுமதி மகாலிங்கம், திமுக நிா்வாகிகள் நெடுஞ்செழியன், ஜம்புலிங்கம், தண்டபாணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com