தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வுபெற்ற காவலா்கள் பங்கேற்கலாம்

வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலா்களாக முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலா்கள் பங்கேற்கலாம். அவ்வாறு தோ்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு அரசாணைப்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள வா்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com