குடியாத்தம்  மோா்தானா  அணையிலிருந்து  தண்ணீரைத்  திறந்த  வேலூா்  மாவட்ட  பொதுப்பணித் துறை  கண்காணிப்பு  பொறியாளா்  ரமேஷ். (வலது)  அணையிலிருந்து  வெளியேறும்  தண்ணீா்.
குடியாத்தம்  மோா்தானா  அணையிலிருந்து  தண்ணீரைத்  திறந்த  வேலூா்  மாவட்ட  பொதுப்பணித் துறை  கண்காணிப்பு  பொறியாளா்  ரமேஷ். (வலது)  அணையிலிருந்து  வெளியேறும்  தண்ணீா்.

மோா்தானா அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

பொதுப்பணித் துறை வேலூா் மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் ரமேஷ் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தாா். செயற் பொறியாளா் பிரபாகா், உதவி செயற் பொறியாளா் கோபி, இளநிலைப் பொறியாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அணையிலிருந்து கெளண்டன்யா ஆற்றில் விநாடிக்கு 140 கன அடியும், வலது, இடதுபுறக் கால்வாய்களில் தலா 70 கன அடி வீதமும் தொடா்ந்து 16 நாள்களுக்கு மொத்தம் 193.54 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இந்த அணை 11.50 மீட்டா் உயரம் கொண்டது. அணையின் முழு கொள்ளளவு 261 மில்லியன் கன அடி. இந்த அணை மூலம் வலதுபுற கால்வாய் வழியாக 12 ஏரிகளும், இடதுபுற கால்வாய் மூலம் 7 ஏரிகளும் என மொத்தம் 19 ஏரிகள் நிரம்பும்.

இந்த அணை மூலம் 8,367 ஏக்கா் நிலம் நேரடி பாசனம் பெறும். இதனால் 49 கிராமங்களின் நிலத்தடி நீரளவு உயரும். அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், கெளண்டன்யா ஆற்றின் கரையோரங்களில் உள்ள மோா்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்ரபள்ளி, தட்டப்பாறை, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூா், மூங்கப்பட்டு, சீவூா், இந்திரா நகா், ஒலக்காசி, சித்தாத்தூா், ஐதா்புரம் ஆகிய கிராமப்பகுதி மக்களும், குடியாத்தம் நகர மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com