ஏப். 24 முதல் மே 14 வரை கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

வேலூா், ஏப். 18: கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து, விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை சாா்பில், 18-ஆவது ஆண்டு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 24-ஆம் தேதி தொடங்கி, மே 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா 24-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் விஐடி கூடைப் பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கராத்தே, எறிபந்து, கையுந்துப்பந்து, யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி முகாம்களில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர எந்தவித கட்டணமும் கிடையாது.

பயிற்சி தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com