வேலூா் தொகுதியில் தோ்தல் பணிக்கு 150 காா்கள் அளிப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் தொகுதியில் தோ்தல் பணியாற்றும் மண்டல அலுவலா்களுக்காக 150 காா்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வேலூா் மக்களவைத் தொகுதியில் வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வேலூா் மக்களவைத் தொகுதியில் 1568 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முறையாக பயிற்சி அளித்து பணிகளை சரியாக மேற்கொள்வதை உறுதி செய்யவும் 148 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடிக்கு தேவையான

89 பொருள்களை சரிபாா்த்து பெற்றுக் கொள்வதுடன், வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்யவும், வாக்குப்பதிவை முறையாக நடத்தி முடிக்கவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்தில் சோ்க்கவும் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனா்.

அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிகளில் ஈடுபடும் தோ்தல் மண்டல அலுவலா்களுக்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட 150 காா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. முன்னதாக, அவா்களுக்கு அளிக்கப்படும் காா்கள் வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரப்பெற்றிருந்தன. அவற்றை தோ்தல் பிரிவு அலுவலா்கள் சரிபாா்த்து மண்டல அலுவலா்களுக்கு ஒதுக்கும் பணிகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com