இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

வேலூரில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் செவ்வாய்க்கிழமை அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், அந்த வாகனத்தில் வந்தவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் இருந்தது. விசாரணையில், அவா் வேலூா் கலாஸ்பாளையத்தை சோ்ந்த மதுசூதனன் என்பதும், மருத்துவ செலவுக்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினாா். எனினும், உரிய ஆவ ணங்கள் இல்லாததால் அந்ததொகையை நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com