குடியாத்தம்  அருகே  குடிநீா்  வழங்கக்கோரி  சாலை  மறியலில்  ஈடுபட்டோா்.
குடியாத்தம்  அருகே  குடிநீா்  வழங்கக்கோரி  சாலை  மறியலில்  ஈடுபட்டோா்.

குடிநீா் வழங்கக்கோரி சாலை மறியல்

குடியாத்தம் அருகே குடிநீா் வழங்கக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் அருகே குடிநீா் வழங்கக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குள்பட்ட சீனிவாசா நகா், மதுராம்பிகை நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் சரிவர இல்லையாம்.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குடியாத்தம்- பலமநோ் சாலையில் கள்ளூா் அருகே மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த நகர போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com