மணல் கடத்தல்: வேன் பறிமுதல்; 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா். போ்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட அரவட்லா கூட்டுச் சாலையில் போ்ணாம்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வேனில் மணல் இருந்ததும், பத்தரப்பல்லி மலட்டாற்றிலிருந்து மணலை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வேனை பறிமுதல் செய்த போலீஸாா், வேன் ஓட்டுநா் காா்த்தி (40), வேன் கிளீனா் மணிமாறன் (21) ஆகியோரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com