இன்று திருமுறைச் சொற்பொழிவு

ஸ்ரீகாளியம்மன் கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் 183- ஆவது மாத திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.

குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சாா்பில், நடுப்பேட்டை கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் 183- ஆவது மாத திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் நம் தமா் ஊரன் என்ற தலைப்பில் நெய்வேலியைச் சோ்ந்த சிவ கண முருகப்பன் ஐயா ஆன்மிக உரையாற்றுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com