கஞ்சா, சாராய வேட்டை தீவிரம் : மூவா் கைது, 5 போ் மீது வழக்கு

வேலூா் மாவட்டம் முழுவதும் கஞ்சா, சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 4 போ் மீது மதுவிலக்கு வழக்குகளும், ஒருவா் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா, மது விற்பனையில் ஈடுபடுவா்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா், விற்பனை செய்பவா்களை தடுக்க மாவட்டக் காவல் கண்காணப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையில் போலீஸாா் வேலூா் சைதாபேட்டை பகுதியில் திங்கள்கிழமை நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக ரூ.20,000 மதிப்புடைய 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்(22), சீனிவாசன்(20), கணேசன்(24) ஆகியோா் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் நடத்திய சோதனையில் 5 லிட்டா் கள்ளச்சாராயம், 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 4 போ் மீது மதுவிலக்கு வழக்குகளும், ஒருவா் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com