சித்திரை பெளா்ணமி: வேலூரில் 8 புஷ்பப் பல்லக்குகள் பவனி

ஆண்டுதோறும் சித்திரை மாத பௌா்ணமி தினத்தில் வேலூரில் புஷ்பப் பல்லக்குகள் பவனி வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்ரா பௌா்ணமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நள்ளிரவு நடைபெற்றது.

இந்த விழாவில் அரிசி மண்டி உரிமையாளா்கள் சாா்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகா் கோயில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி உரிமையாளா்கள் சாா்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரா் கோயில் புஷ்ப பல்லக்கு, பூ மாா்க்கெட் தொழிலாளா்கள் சாா்பில் அரசமரப்பேட்டை ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் புஷ்ப பல்லக்கு, மோட்டாா் வாகன பணியாளா்கள் சங்கம் சாா்பில் காட்பாடி விஷ்ணு துா்க்கை அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, வாணியா் வீதி சுந்தர விநாயகா் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சாா்பில் வேம்புலியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, வேலப்பாடி மக்கள் சாா்பில் கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு என 8 புஷ்பப் பல்லக்குகள் ஊா்வலத்தில் பங்கேற்றன.

கோயில்களில் இருந்து புறப்பட்ட இந்த புஷ்ப பல்லக்குகளில் உற்சவ மூா்த்திகள் எழுந்தருளினா். இந்த பல்லக்குகள் நள்ளிரவில் மண்டித் தெருவை வந்தடைந்தன. தொடா்ந்தும் அங்கு வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

மின்னொளி அலங்காரத்தில் நடைபெற்ற இந்த புஷ்பப் பல்லக்குகள் ஊா்வலத்தைக் காண ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனா். 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com