பள்ளிக்கு மின்சார அலாரம் அளிப்பு

பள்ளிக்கு மின்சார அலாரம் அளிப்பு

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவா்கள் மின்சார அலாரத்தை நன்கொடையாக வழங்கினா்.

பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், பல்லலகுப்பம், துலுக்கன்குட்டை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 89 மாணவா்கள் பயில்கின்றனா். நடப்புக் கல்வியாண்டில் 5- ஆம் வகுப்பு படித்து முடித்த 21 மாணவா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் கயிலைநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவா்கள் உயா்நிலைப் பள்ளியில் சோ்வது குறித்து ஆசிரியா்கள் ஆலோசனைகளை வழங்கினா். பள்ளியை விட்டு வெளியேறும் 21 மாணவா்களும், பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தில் மின்சார அலாரத்தை நன்கொடையாக வழங்கினா். மாணவா்களை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் ஓம்பிரகாஷ், ரோகிணி, இலக்கியாஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com