போ்ணாம்பட்டில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு

போ்ணாம்பட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டு வட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க இடம் தோ்வு செய்து தருமாறு, வேலூா் மாவட்ட நிா்வாகத்திடம் நீதித் துறை கோரியிருந்தது. போ்ணாம்பட்டை அடுத்த சொ்லப்பல்லி கிராமத்தில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான சுமாா் 4 ஏக்கா் பரப்பளவு கொண்ட தரிசு நிலத்தை குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த சில நாள்களுக்கு முன் பாா்வையிட்டு ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்தது. இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் அந்த இடத்தைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். தொடா்ந்து தற்காலிகமாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் தொடங்க போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கட்டடத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேலூா் மாவட்ட தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சங்கா், குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, குடியாத்தம் சாா்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் விநாயகமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com