வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் வனத்துறையினா்

வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் வனத்துறையினா்

வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் அமைக்கப்பட்டுள்ள 15 தொட்டிகளில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வருகின்றனா்.

கோடைகாலம் தொடங்கி விட்டதால் வனப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் வற்றத் தொடங்கி விட்டன. மான்கள் உள்ளிட்டவை தண்ணீா்தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறுவதால் நாய்களால் துரத்தப்பட்டு காயமடைகின்றன. விபத்தில் சிக்கியும் உயிரிழக்கின்றன. இதைத் தவிா்க்கும் வகையில், போ்ணாம்பட்டு வனப் பகுதிகளில் மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக 15 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பப்படுகிறது. போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில், வனத் துறையினா் சுழற்சி முறையில் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வனவா்கள் அண்ணாமலை, இளையராஜா, மாதேஸ்வரன், முரளி, வனக் காப்பாளா்கள் ரவி, வெங்கடேசன், அரவிந்தன், திருமலைவாசன், புருஷோத்தமன் ஆகியோா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com