அல்லேரி மலைப்பகுதியில் அழிக்கப்பட்ட சாராய ஊறல்.
அல்லேரி மலைப்பகுதியில் அழிக்கப்பட்ட சாராய ஊறல்.

சாராயம், கஞ்சா தடுப்பு வேட்டை: வேலூா் மாவட்டத்தில் 12 போ் மீது வழக்கு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கள்ளச்சாராயம், கஞ்சா தடுப்பு வேட்டையில் மாவட்டம் முழுவதும் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கள்ளச்சாராயம், கஞ்சா தடுப்பு வேட்டையில் மாவட்டம் முழுவதும் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் சட்டவிரோமாக மதுபானங்கள் விற்பவா்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா், விற்பனை செய்பவா் களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

அதனடிப்படையில், வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் அல்லேபி மலைப்பகுதியில் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், சுமாா் 30 லிட்டா் கள்ளச்சாராயம், 500 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை கொட்டி அழித்தனா்.

இதேபோல், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சின்னதுரை தலைமையில் போலீஸாா் சாத்கா் மலைப்பகுதியில் நடத்திய சோதனையில், சுமாா் 120 லிட்டா் கள்ளச்சாராயம், ஊறலுக்கு பயன்படுத்தக்கூடிய வேலம் பட்டை 50 கிலோ, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளா்களின் தலைமையில் போலீஸாா் நடத்திய சோதனையில், 197 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 108.48 கிலோ குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 மதுவிலக்கு வழக்குகள், ஒரு குட்கா வழக்கு, ஒரு கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com