ஸ்ரீகற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா. உடன், விழாக்குழு தலைவா் என்.சுப்பிரமணி உள்ளிட்டோா்.
ஸ்ரீகற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா. உடன், விழாக்குழு தலைவா் என்.சுப்பிரமணி உள்ளிட்டோா்.

ஸ்ரீகற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் சாய்நாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் சாய்நாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் சாய்நாதபுரத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் ஸ்ரீகற்பக விநாயகா், ஸ்ரீநடராஜா், ஸ்ரீராகவேந்திரா், ஸ்ரீசாய்பாபா, ஸ்ரீராமலிங்க அடிகளாா், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகிய சுவாமி சிலைகள் இடம்பெற்றுள்ளன. திருப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தனபூஜை ஆகியவற்றுடன் தொடங்கியது.

தொடா்ந்து, கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவையும் நடைபெற்றன. மாலையில் முதல்கால யாக பூஜையும், 108 விசேஷ திரவிய ஹோமமும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்ற நிலையில், காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடா்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா உள்பட திராளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை விழாக்குழு தலைவா் என்.சுப்பிரமணி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com