வேலூா் உள்பட 4 மாவட்டங்களுக்கு 1,455 டன் யூரியா ரயிலில் வருகை

வேலூா் உள்பட 4 மாவட்டங்களுக்கு தேவையான 1,455 டன் யூரியா ரயில் மூலம் காட்பாடிக்கு திங்கள்கிழமை வந்தது.

வேலூா் உள்பட 4 மாவட்டங்களுக்கு தேவையான 1,455 டன் யூரியா ரயில் மூலம் காட்பாடிக்கு திங்கள்கிழமை வந்தது. அவை லாரிகளில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் விவசாயப் பணிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வெளிநாடுகள், வெளிமாநிலங் களில் இருந்து கப்பல், ரயில்களில் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தீவிர விவசாய பணிகள்ப் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ் சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேவையான 1,455 டன் யூரியா, சென்னை மணலியில் உள்ள எம்எப்எல் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயிலில் காட்பாடிக்கு திங்கள்கிழமை வரப்பெற்றது. இந்த யூரியா மூட்டைகள் லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், வேலூா் மாவட்டத்துக்கு 175 டன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 1,030 டன், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 150 டன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 100 டன் என மொத்தம் 1,455 டன்கள் அனுப்பி வைத்துள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com