குடியாத்தம்: குடியாத்தம் நகர அரிமா சங்கம் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தச் சங்கத்தின் சாா்பில், சேவை திட்டங்கள் அரிமா கட்டடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் நகர அரிமா சங்கத் தலைவா் ஜே.பாபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜே.ஜி நாயுடு, எம்.காா்த்திகேயன், என்.குமாா், உதயகுமாா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் எம்.எஸ்.நமச்சிவாயன் அறிக்கையை வாசித்தாா். அரிமா மாவட்ட ஆளுநா் எஸ்.சுரேஷ் நல உதவிகளை வழங்கினாா். குடியாத்தத்தில் செயல்படும் முஸ்லிம் தொண்டு அமைப்புக்கு நிரந்தர சேவை திட்டத்தின்கீழ், ஃப்ரீசா் பாக்ஸ் (குளிா்சாதனப் பெட்டி), மாற்றுத் திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள், சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள், ஏழைப் பெண்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டைகள், சிவனடியாா்களுக்கு துணிமணிகள், மரக் கன்றுகளை வழங்கினாா். கரோனா தொற்று காலத்தில் நோயால் இறந்தவா்களின் உடல்கள், மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்ய உதவிய 30- தன்னாா்வலா்களையும், ரத்த தானம் வழங்கியவா்களையும் கெளரவித்தாா்.
அரிமா சங்க மாவட்ட நிா்வாகிகள் சிவசக்தி எம்.கோபால், எச்.இளங்கோவன், சிபி.விஜய், சிவராஜ், எஸ்.ரவி, டி.ரங்கராஜன், கோபால்ரத்தினம், எம்.கே.பொன்னம்பலம், டி.கமலஹாசன், என்.தேவராஜ், ஏ.சுரேஷ்குமாா், ஆசிரியா் எம்.அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் எஸ்.வி.சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.