கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.
குடியாத்தத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.
Updated on

குடியாத்தம்: குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு புஷ்ப

அலங்காரம், சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனை, வெண்ணெய் ஊட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மூத்த வழக்குரைஞா்கள் கே.மோகன், கே.எம்.பூபதி ஆகியோா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். நாள் முழுவதும் பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com