கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற மாணவிகள்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற மாணவிகள்.

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எம்.சேகா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கே.திருமுருகன் வரவேற்றாா். 300- க்கும் மேற்பட்ட மாணவா்கள் ராதை, கிருஷ்ணா் வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கல்வி இயக்குநா் வெங்கடகிருஷ்ணன், பள்ளி ஆலோசனைக் குழுத் தலைவா் கே.ரஜினி ஆகியோா் பேசினா்.

மாணவா்களுக்கு பாட்டு, பேச்சு, ஒப்பித்தல், உறியடித்தல், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வா் எம்.டி.கீதா, பள்ளி பொறுப்பாளா்கள் ஏ.தேவி, எஸ்.ஹா்ஷா சந்சேத்தி, பி.அங்கயற்கண்ணி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். ஆசிரியை ஏ.எம்.கவிதா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com