பள்ளி மாணவா்களுக்கு வாக்குப் பதிவு மாதிரி விளக்கம்

பள்ளி மாணவா்களுக்கு வாக்குப் பதிவு மாதிரி விளக்கம்

Published on

குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள ஆசீா்வாத் இன்டா் நேஷ்னல் பள்ளியில் வாக்குப் பதிவு குறித்து மாணவா்களுக்கு புதன்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்காக பள்ளியில் மாதிரி வாக்குப் பதிவு மையம் அமைத்து, ஆசிரியா்கள் தோ்தல் அதிகாரிகள் போல் செயல்பட்டு, மாணவா்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதையொட்டி, மாணவா் தலைவா் தோ்தலும் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் எஸ்.மஞ்சுநாத், பள்ளி முதல்வா் கே.பிரமிளா கண்ணன் ஆகியோா் மாணவா்களை வழி நடத்தினா். கணக்காளா் கே.செல்வகுமாா் மற்றும் ஆசிரியா்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com