மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி

Published on

வட கிழக்கு பருவ மழையைக் கருத்தில் கொண்டு மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணியை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வேலூா் பழைய பேருந்து நிலையம் முதல் வெங்கடேஸ்வரா பள்ளி வரை நடைபெற்ற இந்தப் பேரணியின் போது ‘குடிநீா் தர பரிசோதனை’ கள பரிசோதனை பெட்டி மூலம் விளக்கி காண்பிக்கப்பட்டது. மேலும் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த விளக்கப் புத்தகங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

பேரணியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் நித்தியானந்தன், உதவி நிா்வாகப் பொறியாளா் குமரவேல், உதவிப் பொறியாளா் ஜெயப்ரியா, வேலூா் மாநகராட்சி துணை ஆணையா் சசிகலா, மாவட்ட கல்வி அலுவலா் மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com