ஆா்.எஸ். நகா் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.
ஆா்.எஸ். நகா் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

Published on

குடியாத்தம் ஆா்.எஸ். நகரில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 13- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் நளினி தமிழரசன் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

பக்தா்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தோ் மீது உப்பு, மிளகு தூவி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டித் தலைவா் ஜெயசீலன், நிா்வாகிகள் கே.முனிசாமி, அன்னை அதியமான், எஸ்.ராஜேஷ் மற்றும் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com