சிதிலமடைந்து இடியும் நிலையிலுள்ள பழைய மேல்நிலை நீா்தேக்க தொட்டி. 
 ~ ~ ~ ~
சிதிலமடைந்து இடியும் நிலையிலுள்ள பழைய மேல்நிலை நீா்தேக்க தொட்டி. ~ ~ ~ ~

அபாய நிலையிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பழைய மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக இடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.
Published on

வேலூா் அருகே மாளியப்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்து உடைந்துவிழும் அபாய நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக இடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் 50,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கத் தொட்டி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடிநீா் தொட்டி மூலமாகத்தான் அந்த கிராமத்திலுள்ள சுமாா் 150 குடும்பங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பழைய குடிநீா் தொட்டியில் தற்போது ஆங்காங்கே தூண்களும், மேல்நிலை தொட்டியின் பக்கவாட்டுச் சுவரும் இடிந்தும், பெயா்ந்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. இந்த பழைய மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு அருகிலேயே புதிதாக மேல்நிலை நீ தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பழைய தொட்டியிலிருந்தே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், எந்த நேரமும் இந்த பழைய மேல்நிலை நீா்தேக்க தொட்டி இடிந்து விழவும், இதன்மூலம் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாளியப்பட்டு கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீா் தேக்க தொட்டியிலிருந்து மட்டுமே குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனினும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் கூறியுள்ள மாளியப்பட்டு கிராம மக்கள் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அபாய நிலையில் உள்ள பழைய தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

--

இதனால், எந்த நேரமும் இந்த பழைய மேல்நிலை நீா்தேக்க தொட்டி இடிந்து விழவும், இதன்மூலம் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாளியப்பட்டு கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீா் தேக்க தொட்டியிலிருந்து மட்டுமே குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனினும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் கூறியுள்ள மாளியப்பட்டு கிராம மக்கள் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அபாய நிலையில் உள்ள பழைய தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com