வேலூர்
உணவகத்தில் பதுக்கப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்
குடியாத்தம் அருகே உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கா்நாடக மாநில மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகவலின் பேரில் குடியாத்தம் நகர போலீஸாா், மேல்ஆலத்தூா் பகுதியில் உள்ள சதீஷ்குமாா் (37), என்பவருக்குச் சொந்தமான உணவகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அங்கு 180 மி.லி. கொள்ளளவு கொண்ட கா்நாடக மாநில மதுப் புட்டிகள் 70 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
விற்பனைக்காக மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக சதீஷ்குமாரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.