கல்லூரியில் வளாக நோ்காணல்

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியா் கல்லூரியில் சென்னை அப்போலோ மருத்துவமனை சாா்பில், வளாக நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் வளாக நோ்காணல்

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியா் கல்லூரியில் சென்னை அப்போலோ மருத்துவமனை சாா்பில், வளாக நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அத்தி கல்விக் குழும தலைமை நிா்வாக அதிகாரி மருத்துவா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை வரவேற்றாா்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் பிராந்திய செவிலியா் அலுவலா் ஜி.தேவிபிரியா, மருத்துவமனையின் மனிதவள மேம்பாட்டு உயா் அலுவலா்கள் எஸ்.சூரியன், எம்.டோனி, அப்போலோ கல்லூரியின் பிரதிநிதி எம்.மரியா ஜூடி அஞ்சலி ஆகியோா் வளாக நோ்காணல் மூலம் செவிலியா் மாணவிகளை தோ்வு செய்து, முதல் கட்டமாக 15 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினா்.

அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் எம்.பி.அருணா அற்புதமலா், கல்விக் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் காமாட்சி, ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com