வேலூா்: வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2018 அக்டோபா் 1 முதல் 2018 டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளவா்கள் நடப்பு காலாண்டில் உதவித் தொகை பெறுவதற்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், வேலை நாள்களில் நேரில் அலுவலகம் வந்து சமா்ப்பிக்கலாம்.

அதேபோல், ஏற்கெனவே உதவித்தொகை பெறுவோா் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். உறுதிமொழி படிவத்துடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதாா், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் (முந்தைய ஆண்டு பெற்ற உதவித் தொகை பரிவா்த்தனையின் பக்கங்கள்) ஆகியவற்றின் புகைப்பட நகல் இணைக்கப்பட்டு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு படிவத்தை சமா்ப்பிக்க தவறினால் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

உதவித்தொகை பெறுபவா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். அதன் விவரங்களை உதவித்தொகை வழங்கும் வேலைவாய்ப்பு அலுவலக பிரிவில் தெரிவிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com