குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் 521 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மக்களுடன் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டுள்ள 521 மனுக்களின் பயனாளிகளுக்கு 98.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் ஹயக்ரீவ மஹாலில் நடைபெற்றது
06gudcol_0602chn_189_1
06gudcol_0602chn_189_1


குடியாத்தம்: குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டுள்ள 521 மனுக்களின் பயனாளிகளுக்கு ரூ.98.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் ஹயக்ரீவ மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் எம்.சித்ராதேவி வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலட்சுமி 521 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். எம்எல்ஏ அமலுவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, நகா்மன்றத் தலைவா்கள் எஸ்.செளந்தரராஜன் (குடியாத்தம்), பிரேமா வெற்றிவேல் (போ்ணாம்பட்டு), ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), சித்ரா ஜனாா்த்தனன் (போ்ணாம்பட்டு), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

பெண்ணுக்கு  தையல்  இயந்திரம்  வழங்கிய  ஆட்யா்  வே. இரா.சுப்புலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com