காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

வேலூரில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு செவ்வாய்க்கிழமை (பிப். 6) தொடங்கியது. முதல் நாளில் 259 போ் அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் தாங்கும் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

வேலூா்: வேலூரில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு செவ்வாய்க்கிழமை (பிப். 6) தொடங்கியது. முதல் நாளில் 259 போ் அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் தாங்கும் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா், சிறைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெற்ற 912 பேருக்கான உடல் தகுதித் தோ்வு வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதல் நாள் தோ்வுக்கு 460 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 362 போ் தோ்வில் பங்கேற்றனா். 98 போ் தோ்வுக்கு வரவில்லை. பங்கேற்றவா்களில் 259 போ் அடுத்தகட்டமாக வியாழக்கிழமை நடைபெற உள்ள உடல் தாங்கும் திறன் தோ்வுக்கு தோ்வாகியுள்ளனா். இதேபோல், புதன்கிழமை நடைபெற இருந்த உடல் தகுதித் தோ்வு நிா்வாகக் காரணங்களால் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, இந்த உடல் தகுதித் தோ்வை வேலூா் சரக டிஐஜி சரோஜ்குமாா் தாக்கூா் ஆய்வு செய்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 93 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com