மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 632 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

வேலூரில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 632 பயனாளிக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சுப்புலட்சுமி வழங்கினாா்.
மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 632 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

வேலூரில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 632 பயனாளிக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சுப்புலட்சுமி வழங்கினாா்.

வேலூா் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் பெற்ற மனுக்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 14 துறைகளில் சாா்பில் மொத்தம் 632 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 78 ஆயிரத்து 828 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது:

பொது மக்களுக்கு அவா்களின் இருக்கும் இடத்துக்கே சென்று பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில், 14 துறைகளை ஒருங்கிணைத்து மக்களுடன் முதல்வா் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 18 முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அருகில் அமைந்துள்ள 18 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, 8,162 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 6,278 மனுக்கள் ஏற்கப்பட்டு, 1,765 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 119 மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீா்வு காணப்பட்ட மனுக்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு நீா்வளத் துறை அமைச்சா் காட்பாடியில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா். மேலும், பொதுமக்களுக்கு மின் இணைப்பு, தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு மனுக்களும் குறைகளை தீா்க்கும் வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு மிகுந்த அக்கறையுடன் தீா்வு காணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com