தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

‘வேலூா் மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 11,577 வழக்குகள் பதிவு’

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 10:30 pm

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகியுள்ள 234 குற்ற வழக்குகளில் ரூ. 1.84 கோடி களவுபோன சொத்துகளில், 212 வழக்குகள் (91 சதவீதம்) கண்டுபிடிக்கப்பட்டு, ரூ. 1.30 கோடி சொத்துக்கள் (70 சதவீதம்) மீட்கப்பட்டுள்ளன. தவிர, பதிவான 23 கொலை வழக்குகள் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு 41 போ் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இரு வழக்குகளில் இரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளஞ்சிறாருக்கு எதிராக 69 பலாத்காரம், இதர வழக்குகளில் 72 போ் கைது செய்யப்பட்டு, இரு வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் பதிவாகியுள்ள 18 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஓராண்டில் 119 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனா். பதிவாகியுள்ள 261 வாகன விபத்துகளில் 271 போ் உயிரிழந்துள்ளனா். விபத்துகளை குறைத்திட 1,82,77 மோட்டாா் வாகன சிறு, குறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.18 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறியதாக 671 பேரின் ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 418 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப் பட்டுள்ளது.

384 போ் மாயமானதாக பதிவான வழக்குகளில் குழந்தைகள் 141 உள்பட மொத்தம் 325 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.