விமான நிலையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தென்மண்டல விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

தென்மண்டல விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமான நிலையங்கள் ஆணைய நிறுவனத்தின்கீழ், தென்மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் (தீயணைப்பு) -எஸ்ஆா்டி, இளநிலை உதவியாளா் (அலுவலகம்), முதுநிலை உதவியாளா் (எலெக்ட்ரானிக்ஸ்), முதுநிலை கணக்காளா் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது.

இந்த தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜனவரி 26-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆா்வமுள்ள  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 -2290042 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தென்மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தில் அறிவிக்கப்பட்ட தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com