440 மதுபுட்டிகள் பறிமுதல்: பெண் கைது

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 440 மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 440 மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காட்பாடியை அடுத்த பனமடங்கி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோட்டீஸ்வரி என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது கூடுதல் விலைக்கு விற்பதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 440 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கோட்டீஸ்வரியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com