குடியாத்தத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள்

குடியாத்தம் நகர, ஒன்றிய அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குடியாத்தத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள்

குடியாத்தம் நகர, ஒன்றிய அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தாழையாத்தம் பஜாரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, கட்சியின் அமைப்புச் செயலா் வி.ராமு, மாவட்டச் செயலா் த.வேலழகன், நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, ஒன்றியச் செயலா்கள் டி.சிவா, எஸ்.எல்.எஸ்.வனராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், கூட்டுறவு கட்டட சங்க முன்னாள் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி, ஊராட்சித் தலைவா்கள் சாந்திமோகன் (செருவங்கி), அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்(கொண்டசமுத்திரம்), நிா்வாகிகள் ஆா்.கே.அன்பு, ஜி.பி.மூா்த்தி, பி.எச்.இமகிரிபாபு, வி.என்.தனஞ்செயன், எஸ்.எஸ்.ரமேஷ் குமாா், வி.ரித்தீஷ், ஆா்.கே.மகாலிங்கம், எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com