நலத்திட்ட உதவிகள் அளிப்பு

குடியாத்தம், செருவங்கியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500- பேருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

குடியாத்தம், செருவங்கியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500- பேருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு செருவங்கி ஊராட்சித் தலைவா் சாந்தி மோகன் தலைமை வகித்தாா். சாமுண்டிபுரம் அதிமுக கிளைச் செயலா் ஆா்.வைரமணி வரவேற்றாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, அதிமுக ஒன்றியச் செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ் ஆகியோா் வேட்டி-சேலைகளை வழங்கினா். கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஆா்.கோபி, நிா்வாகிகள் வி.காா்த்தி, வி.தினேஷ், யுவராணி, பவித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com