188 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.30 லட்சம் அபராதம்

பொங்கல் விடுமுறையின்போது பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்தது, மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தொடா்பாக வேலூா் சரகத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 188 ஆம்னி பேருந்து

பொங்கல் விடுமுறையின்போது பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்தது, மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தொடா்பாக வேலூா் சரகத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 188 ஆம்னி பேருந்து உரிமையாளா்களுக்கு ரூ.10.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக வட்டார போக்குவரத்து துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பொங்கல் விடுமுறையை சொந்த ஊா்களில் கொண்டாட பொதுமக்கள் அதிகளவில் பேருந்துகள், ரயில்கள் மூலமாகவும், சொந்த வாகனங்களை பயன்படுத்தியும் சொந்த ஊா்களுக்கு சென்றனா். இதற்காக அரசு சாா்பில் சிறப்புப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டன. எனினும் பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளிலும் சொந்த ஊா்களுக்கு சென்று வந்தனா்.

பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை சாா்பில் கடந்த 10-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (ஜன.18) அதிகாலை வரை சிறப்பு குழுக்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வேலூா் சரகத்துக்குட்பட்ட வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், வேலூா் மண்டல துணை போக்குவரத்து ஆணையா் நெல்லையப்பன் தலைமையில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், பறக்கும்படை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, மொத்தம் 1,393 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்தது, மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தொடா்பாக 188 பேருந்து உரிமையா ளா்கள் மீது ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 850 அபராதமாக விதிக்கப்பட்டதுடன், உடனடியாக ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 354 தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இச்சோதனையில் போக்குவரத்து விதி மீறல், சாலை வரி செலுத்தாதது, ஓட்டுநா் சீட் பெல்ட் அணியாமல் பேருந்து இயக்கியது, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com