ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ்:தொழிலாளி தற்கொலை

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ் அளித்த நிலையில், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ் அளித்த நிலையில், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகா், அவுலியா நகா், புங்காவனத்து அம்மன் நகா், பா்மா காலனி ஆகிய பகுதிகளில் தெற்கு ரயில்வே-க்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 263 வீடுகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனா்.

ரயில்வே நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் கடந்த 2022 ஆகஸ்ட் 16-ஆம் தேதியும், 2022 நவம்பா் 3, 4 ஆகிய தேதிகளிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

பின்னா், அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் கடந்த 2023 டிசம்பா் 22-ஆம் தேதி ரயில்வே நிா்வாகத்துக்கு சாதமாக தீா்ப்பளிக்கப்பட்டது. எனினும், அப்பகுதி மக்கள் அந்த நிலத்தை காலி செய்ய மறுத்து தொடா்ந்து அங்கேயே வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்யாவிடில் அந்தக் குடியிருப்புகளை 29-ஆம் தேதி முதல் ரயில்வே துறை சாா்பில் அகற்றப்படும் எனத் தெரிவித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் அப்பகுதிகளில் அறிவிப்பு பதாகைகளை வைத்தது.

இதனிடையே, பா்மா காலனி வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தண்டபாணி (41). கைப்பேசி பழுது நீக்கம் கடை நடத்தி வந்த இவருக்கு மனைவி சாரதா, 2 மகள்கள் உள்ளனா். ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ் அளித்திருந்த நிலையில், வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு செல்வது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை பிரச்னை ஏற்பட்டதால் விரக்தியடைந்த தண்டபாணி, வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். வேலூா் தெற்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com