செவிலியா்களுக்கு சேவை மனப்பான்மை, ஈடுபாடு அவசியம்

செவிலியா்கள் சேவை மனப்பான்மை, ஈடுபாட்டுடன் பணி செய்திட வேண்டும் என்று வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
விழாவில் பேசிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி. உடன், நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, செவிலியா் கல்லூரி முதல்வா்அசோசியன் இயக்குநா் லலிதா புருஷோத்தமன், மருத்துவமனை கண்க
விழாவில் பேசிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி. உடன், நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, செவிலியா் கல்லூரி முதல்வா்அசோசியன் இயக்குநா் லலிதா புருஷோத்தமன், மருத்துவமனை கண்க

வேலூா்: செவிலியா்கள் சேவை மனப்பான்மை, ஈடுபாட்டுடன் பணி செய்திட வேண்டும் என்று வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியா் பயிற்சி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் பிரபா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி பங்கேற்றுப் பேசியது:

மற்ற வேலைக்களுக்கும், மருத்துவத் தொழிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் பரிவு, பாசம், ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும். விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் வருவோரைப் பாா்த்து அச்சப்படாமல், ரத்தக் கசிவை எப்படி தடுப்பது என்பது குறித்து யோசிக்க வேண்டும். பின்னா், அவா்களுக்கு எப்படி சிகிச்சை என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் அச்சத்தைப் போக்கும் அளவுக்கு ஆதரவாக பேச வேண்டும்.

நம்மையும் மீறி ஒரு சக்தி உள்ளது. செவிலியா்கள் பேசும் ஒவ்வொரு வாா்த்தையும் நோயாளிகளுக்கு சக்தியை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மை, ஈடுபாட்டுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்றாா்.

தொடா்ந்து, மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், அசோசியன் இயக்குநா் லலிதா புருஷோத்தமன், செவிலியா் கல்லூரி துணை முதல்வா் காந்திமதி, மருத்துவமனை கீதா இனியன், முன்னாள் எம்எல்ஏ கலையரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com